மேஷம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும், நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், அழகிய நீண்ட புருவங்களும், அழகான பல்வரிசையும் கொண்டவர்கள். அடர்த்தி யான தலைமுடியிருக்கும். காதுகள் எடுப்பாக இருக்கும். பார்வைக்கு வெகுளிபோல காணப்பட் டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்க்காயுளும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகமிருக்கும்.

Advertisment

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்களாகவும், தன்னுடைய வாக்கு வண்மையைப் பயன்படுத்தி தான்சொல்லும் சொல்லே சரி என வாதிடும் ஆற்றலும் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்குத் திறமை யால் பிறரைத் திணறும்படிசெய்து தான்செய்த தவறை அப்படியே மறைத்துவிடுவார்கள். வீண்பழிச் சொற்களுக்கும் செவிசாய்க்கமாட்டார்கள். சிரிக்க சிரிக்கப்பேசி எல்லாரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு.

வெகுளியாகவும் கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவுமறை வின்றி மனந் திறந்து பேசுவார்கள். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள்.

Advertisment

தன்னுடைய கௌரவத்திற்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படாதவாறு பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் விடுவார்கள். கவலைகளை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமை யும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவர்களது அகங்கார குணமும் சுயேச்சையான சுபாவமும் இவர் களை நேசிப்பவரைக்கூட வெறுக்கும்படி செய்துவிடும்.

திடீரென்று மன அமைதியை இழந்துவிடு வார்கள். என்றாலும், தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவர்களுக்கு உடன்பிறந்தது என்பதால் எதையும் சமாளித்துவிடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.

செவ்வாயின் லக்னத்தில் பிறந்திருப்பதால் தனக்குக் கீழ் வேலையாட்களை வைத்துக்கொண்டு சிறந்த நிர்வாகியாகவும், எதிலும் கெட்டிக்காரர்களாகவும் இருப்பார்கள். செல்வம், செல்வாக்குடன், ஆடை ஆபரணம் சேர்ப்பதில் விருப்பம் கொண்டவர்கள். உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் எதிலும் முன்கோபியாக இருப்பார்கள். ஐந்து வயதில் தீயால் கண்டமும், 10 வயதில் உஷ்ணத்தால் பாதிப்பும், 12 வயதில் காதுகளில் நோயும், 20 வயதில் விஷத்தால் பயமும், 25 வயதில் நீரினால் கண்டமும், 28 வயதில் வெட்டுக் காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

Advertisment

லக்னாதிபதி செவ்வாய் ஆயுள் ஸ்தானமான 8-ஆம் வீட்டிற்கும் அதிபதியாவார். செவ்வாய்- ஆயுள்காரகன் சனி கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் வலுவாக அமையப் பெற்று சுபகிரகப் பார்வை பெற்றால், நீண்ட ஆயுள் உண்டாகும்.

மேஷ லக்னாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான சூரியன், சந்திரன், குரு ஆகியவை யோகத்தை எற்படுத் தக்கூடிய கிரகங்களாகும். 3, 6-க்கு அதிபதியான புதன் மகா பாவியாகும். சர லக்னம் என்பதால் 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் மாரகாதிபதி ஆகும்.

1-ஆம் பாவம் (மேஷ லக்னம்)

perumal

ஜென்ம லக்னத்தைக் கொண்டு தோற்றம், உடல் அமைப்பு, ஆயுள், ஆரோக்கியத்தைப் பற்றி தெளிவாக அறியலாம்.

லக்னாதிபதி செவ்வாய் கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்று இருந்தாலும், குரு, சூரியன், சந்திரன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்று இருந்தாலும், சுப கிரகச் சேர்க்கை பெற்று ஆட்சி, உச்ச நிலையில் அமையப் பெற்றாலும், சனி சாதகமாக இருந்தாலும் நீண்ட ஆயுள், சிறப்பான உடலமைப்பு, நல்ல வசதி வாய்ப் புகள் உண்டாகும்.

குரு, செவ்வாய் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் பலமுடன் அமையப் பெற்றாலும், சனி லக்னாதிபதியான செவ்வாய் சேர்க்கைப் பெற்று, செவ்வாய், சனி வக்ரம் பெறாமல் அமையப்பெற்றாலும் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும்.

மேஷ லக்னத்திற்கு மகாபாவியான புதன், ராகு சேர்க்கை பெற்று சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இல்லாமல் அமையப்பெற்றால் குழந்தைப்பருவத்தில் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். சனி, செவ்வாய் பலம் இழந்தாலும், வக்ரம் பெற்றிருந்தாலும் இளம் வயதில் கண்டங்கள், உடல் பலவீனம், சோம்பல் தன்மை உண்டாகும். சனி, செவ்வாய் சுபகிரகப் பார்வை, சாரம் பெற்றிருப்பது நல்லது.

2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் மாரகா திபதி என்பதாலும், 3, 6-க்கு அதிபதி புதன் என்பதாலும் சுக்கிரன், புதன் ஆகிய கிரகங் களின் தசா புக்திக் காலங்களில் ஆரோக் கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

2-ஆம் பாவம் (மேஷ லக்னம்)

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தைக் கொண்டு பொருளாதார நிலை, குடும்பம், வாக்கு, பேச்சாற்றல், வலது கண் போன்றவற்றை அறியலாம்.

மேஷ லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சுக்கிரன் கேந்திர, திரிகோணத்தில் இருந்தாலும், 4-ஆம் அதிபதி சந்திரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், குருவின் வீடான 12-ல் உச்சம் பெற்றாலும் செல்வம், செல்வாக்குடன் வாழும் அமைப்பும், நல்ல பணவரவும் அமையும்.

சுக்கிரன்- சனி, குரு சேர்க்கை பெற்று, சந்திரனுக்கு கேந்திரத்தில் அமையப் பெற்றால் பெண்களால் பணவரவு உண்டாகும். சுக்கிரன், சூரியன் சேர்க்கைப் பெற்று குரு பார்வை பெற்றால் தந்தை மற்றும் பூர்வீக வழியில் பணவரவு உண்டாகும். சுக்கிரன், ராகு இணைந்து 9, 12-ல் அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடு மூலமாக பணவரவுகள் உண்டாகும். சுக்கிரன், குரு பலமாக அமையப் பெற்றால் பணம் பலவகையில் வந்துசேரும்.

குரு, சுக்கிரன் மறைவு ஸ்தானமான 3, 6, 8-ல் இருந்தாலும், ராகு, கேது சேர்க்கைப் பெற்று பலவீனமாக இருந்தாலும், வக்ரம் பெற்றிருந் தாலும் பொருளாதாரநிலையில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று, செவ்வா யுடன் இணைந்து குரு பார்வை பெற்றாலும், குரு ஆட்சி பெற்றிருந்தாலும் பூமி, மனையால் பணவரவுகள் கிடைக்கப்பெற்று முன்னேற்றம் ஏற்படும். குரு, சுக்கிரன் இணைந்து உடன் சனி, ராகு சேர்க்கைப் பெற்று 3, 6, 12-ல் இருந்தால், தேவையற்ற பெண் சேர்க்கைகளால் வீண்விரயங் களை சந்திக்க நேரிடும். மேற்கூறிய கிரகச் சேர்க்கையுடன் கேது அல்லது ராகு வலுப் பெற்று அமைந்திருந்து அதன் தசை, புக்தி நடைபெறும் காலங்களில் மதுவுக்கு அடிமை யாகக்கூடிய அமைப்பு- அதன்மூலம் பணவிரயம் ஏற்படும். சுக்கிரன்- சனி, ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் பல்வேறு முறையற்ற காரியங்கள் மூலம் பணவரவுகள் ஏற்படும்.

சுக்கிரன், புதன் கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்று குருவின் பார்வை சுக்கி ரனுக்கோ 2-ஆம் வீட்டிற்கோ அமையப் பெற்றிருந்தால், சாஸ்திர சம்பிரதாயம் கொண்ட குடும்பத்தில் பிறந்து, சமுதாயத்தில் பெயர், புகழுடன் வாழ்வார்கள். 2-ல் குரு, சுக்கிரன், சந்திரன் போன்ற சுபர்கள் இருந்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சுபாவம் இருக்கும்.

சூரியன், செவ்வாய் 2-ல் இருந்தால் அதிக முன்கோபத்துடன் பேசும் சுபாவம் இருக்கும்.

சனி, ராகு 2-ல் இருந்தால் பேச்சில் கடுமை இருக்கும். இதனால் குடும்பத்தில் ஒற்று மைக்குறைவு உண்டாகும். இக்கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் ஏதாவதொரு காரணத் தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு குடும்பத்தை விட்டே விலகி இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

சுக்கிரன், புதன் நீசம் பெற்று அல்லது அஸ்தங்கமாகி சனி, ராகுவின் சேர்க்கை பெற்றிருந்தால் பேசும் தன்மையில் குறைபாடு உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் இணைந்து 6, 8-ல் அமையப்பெற்று உடன் சனி, ராகு இருந்தாலும் பார்த்தாலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்படும். சுக்கிரன், சந்திரன் இணைந்து பலவீனமாக இருந்தால் கண்களில் நீர் வடியும் நிலை உண்டாகும். சுக்கிரன், சூரியனுடன் செவ்வாய் இணைந்து 2, 12-ல் இருந்து சுப கிரகப் பார்வையில்லாவிட்டால் கண்களில் ரத்த சம்பந்த பாதிப்பு உண்டாகி மத்திம வயதில் பார்வை பாதிக்கும்.

பாவ கிரகங்கள் 2, 6, 8, 12-ல் அமையப் பெற்றிருந்தால் அக்கிரகங்களின் தசா புக்திக் காலத்தில் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

மேஷ லக்னத்தின் மற்ற பாவங்கள் அடுத்த இதழில்..

செல்: 72001 63001